தேயிலை மருத்துவ பயன்கள்
தேயிலை இதை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உலகம் முழுவதும் 90% க்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகிறார்கள். காலை எழுந்தவுடன் தேநீருடன் அந்நாளை ஆரம்பிக்கிறார்கள். இது உற்சாக பானமாக கருதப்படுகிறது.
உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் தேநீர் பல மருத்துவ நன்மைகளையும் கொண்டது. உலகில் அதிக தேயிலை உற்பத்தி நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் நீலகிரி, டார்ஜிலிங், அசாம் போன்றவை அதிகமான தேயிலைகள் விளையும் பகுதிகளாகும்.
உடலுக்கு உற்சாகம் தரும்
தேநீர் மனதிற்கும், நரம்புகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். மருத்துவ நன்மைகள் கொண்ட உற்சாக பானம் தேநீர் (டீ) மட்டுமே.
நரம்பு தளர்ச்சி
தேநீருடன் சுக்குப்பொடியை சேர்த்து அருந்தினால் உடலுக்கு நல்ல உற்சாகத்தை தரும்.நரம்பு தளர்ச்சி குணமாகும்
புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது
தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்களிடம் ஆராய்சிகள் மேற்கொண்டதில் புற்றுநோய் வரும் அபாயம் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கல்லீரல், மார்பகம், தோல் மற்றும் நுரையீரல் போன்றவற்றில் ஏற்படுத்தும் புற்றுநோயை செல்களை தடுக்கிறது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது
தேநீர் இசுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது இதனால் இரத்தத்தில் சர்க்கரையை பட்டுப்படுத்தி நீரிழிவு நோயின் அபாயத்தை குறைகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தேனீர் அருந்துவது நன்மையை தரும்.
வயிற்றுப்போக்கு குணமாக
வெந்நீரில் தேயிலைப்பொடியை போட்டு அதில் எலுமிச்சை சாற்றை கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.