மூலிகைகள்

இலவங்கப்பட்டை பயன்கள்

இலவங்கப்பட்டை இலவங்கம் மரத்திலிருந்து எடுக்கப்படும் பட்டையாகும். நறுமணத்திற்க்காக சமையலில் சேர்க்கப்படுகிறது. இதில் மருத்துவ பலன்களும் ஏராளமாக உள்ளன. இதனை கருவாப்பட்டை என்றும் அழைப்பதுண்டு.

இலவங்கப்பட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

இதில் கார்ப்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு, ஸ்டார்ச், புரேட்டீன், கலோரிகள், மினரல், கால்சியம், அயன், சோடியம், ஜிங்க்,காப்பர், செலினியம்,மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.

இதயத்திற்கு பலம் சேர்க்கும்

இலவங்கப்பட்டையை பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட இதயத்திற்கு பலத்தை கொடுக்கும். மேலும் ஞாபக சக்தியை அதிகரித்து மூளைக்கு பலம் சேர்க்கும்.

இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நன்மை தரக்கூடிய கொழுப்பினை தருவதால் நெஞ்சு வலி வருவதில் இருந்து நம்மை காக்கிறது.

உடல் நடுக்கம், நரம்பு கோளாறு நீங்க

இலவங்கப்பட்டை பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் நடுக்கம் நீங்கும். சிலருக்கு கண் துடிப்பு அதிகமாக இருக்கும் அவர்கள் இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.

நரம்புகளுக்கு பலத்தை தரும். மேலும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் உதிர்ச்சிக்கலை நீக்கும்.

பல் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்

இலங்கைப்பட்டை சேர்த்து பற்பொடி அதிகமாக இப்பொழுது வருகிறது. நாம் வீட்டிலேயே பற்பொடி தயாரிக்கும் பொழுது அதில் இலவங்கப்பட்டையும் சேர்த்து உபயோகித்தால் வாய் நாற்றம், பல் வலி, இரதம் கசிதல், பல் கூச்சம் போன்றவை நீங்கும்.

வாயு தொல்லை நீங்க

இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்து பயன்படுத்தி வந்தால் மூலம், வாய்வு தொல்லை மற்றும் வயிற்றுப்புண் குணமாகும். உணவு எளிதில் ஜீரணமாகும்.

தொண்டை வலி நீங்க

இப்பட்டையில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் ஆண்டி ஆக்சிடென்டுகள் உள்ளதால் தொண்டைவலியை எளிதில் குணமாக்கும்.

தேநீரில் சிறிதளவு இலவங்கப்பட்டை தூளை சேர்த்து குடித்தால் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு குணமாகும்.

முடி வளர்ச்சிக்கு

தலையில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது. இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் மேலும் முடி உதிர்வதையும் தடுக்கும்.

ஆலிவ் ஆயில் 50மிலி அளவு எடுத்து சூடாக்கி இறக்கி வைத்து விட்டு அதில் தேன் ஒரு ஸ்பூன், இலவங்கப்பட்டை பொடி ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து கலக்கி சூடு ஆறியது தலையில் நன்றாக தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வர வேண்டும்.

வாரம் ஒரு முறை இது போன்று செய்து வர முடி உதிர்வது நின்று முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

இலவங்கப்பட்டை தீமைகள்

கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் இரத்த கொதிப்பு இலவங்கப்பட்டையை தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சேர்த்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =

error: Content is protected !!