மூலிகைகள்

வாழைப்பழம் பயன்கள்

வாழைப்பழம் பல நிறங்களிலும், பல வகைகளில் உள்ளது. 30க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன.  முக்கனிகளில் ஒன்றாக உள்ளது. பூஜைகளுக்கு சுபகாரியங்களுக்கும் முக்கியமாகஇடம் பெறக்கூடியது. வாழைப்பழத்தில் 60% நீர்ச்சத்து உள்ளதால் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய உணவாகும்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

வாழைப்பழத்தில் இரும்புச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற சத்துக்கள் உள்ளது.

வாழைப்பழம் வகைகள்

  • ரஸ்தாளி
  • பூவன்
  • கற்பூரவள்ளி
  • கறிவாழை
  • செவ்வாழை
  • கருவாழை
  • வெள்வாழை
  • மலைவாழை
  • மட்டிப்பழம்
  • மோரிஸ்
  • மொந்தன் பழம்
  • தேன் வாழை
  • ஏலக்கி
  • பச்சை வாழை
  • அடுக்கு வாழை
  • பேயன் வாழை
  • நேந்திரம் வாழை

வாழைப்பழத்தின் நன்மைகள்

  • இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் இதனால் அனிமியா போன்ற இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாது.
  • இரவு உணவுக்கு பின் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் எளிதில் செரிமான ஆகும். மலச்சிக்கல் வராமல் இருக்கும்.
  • உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இரத்த சோகை பிரச்சினை வராமல் தடுக்கிறது.
  • இரைப்பை மற்றும் வயிற்றில் சுரக்கும் கட்டுப்படுத்துகிறது. இதனால் இரத்தசோகை மற்றும் பக்கவாதம் பிரச்சினை வராமல் தடுக்கிறது.
  • உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
  • தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
  • வயிற்றுப் புண்களை குணமாக்கும். மேலும் வயிற்றை பாதிக்கும் நுண் கிருமிகளை அழித்து வயிறுக்கு பாதுகாப்பை தருகிறது.
  • மலைவாழைப்பழத்துடன் கசகசா மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.
  • வாரம் 5 செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்மையை அதிகாரிக்கும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − four =

error: Content is protected !!