வேர்க்கடலை பயன்கள்
வேர்க்கடலை இந்தியாவில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இது நட்ஸ் வகையை சார்ந்ததாகும். நிலக்கடலை, மணிலா, மல்லாட்டை போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. சுருக்கமாக ‘கடலை’ என்று அழைக்கப்படுகிறது.
வேர்க்கடலையில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புசத்தும் உள்ளது. வேர்க்கடலையின் முக்கிய குணம் இரத்த மூலத்தை குணமாகும். ஆண்மையை அதிகரிக்கும், உடலை உறுதியாக்கும்.
கடலை எண்ணெய்
வேர்க்கடலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கடலெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள்
100 கிராம் வேர்க்கடலையில் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து, கால்சியம், காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், மெக்னீசியம், துத்தநாகச் சத்து, பாஸ்பரஸ்,தண்ணீர் சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
வேர்க்கடலை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்குமா?
வேர்க்கடலை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்பது முற்றிலும் ஒரு பொய்யான செய்தி, நிக்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வரும் ஆபத்து குறைகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் 50 கிராம் அளவு கடலையை தாராளமாக சாப்பிடலாம்.
உண்மையில் தீங்கு விளைவிக்கக்கூடிய ட்ரைகிளிசரைட்ஸ் போன்றவற்றை குறைத்து. நன்மை தரக்கூடிய கொழுப்பை அதிகரிக்கிறது.
வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. ஆண்களுக்கு தாது விருத்தி அடைய செய்கிறது.
- மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக இயங்க வைக்கிறது. மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- இதில் இதயத்தை பாதுக்காக்கும் பண்புகள் உள்ளதால் இதய பிரச்சினைகளில் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது.
- வெல்லத்துடன் வேர்க்கடலையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் முதுவலியில் இருந்து விடுபடலாம்.
- குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
- புரதச்சத்து இல்லாதவர்கள் இதை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் அவர்களுக்கு சிறந்த உணவாக வேர்க்கடலை விளங்குகிறது.
- பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்கிறது.
- சர்க்கரை நோய் வராமல் கட்டுக்குள் வைக்கலாம்.
- நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் வராமல் இருக்க உதவுகிறது.
- புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
வேர்க்கடலையை எப்படி சாப்பிடலாம்
- பச்சையாக உண்பதை தவிர்க்கவும். இதை வறுத்து அல்லது அவித்து சாப்பிடலாம்.
- சர்க்கரையுடன் சேர்த்து மிட்டாய் செய்து சாப்பிடலாம்.
- வேர்க்கடலையை சட்னி செய்து சிற்றுண்டிகளுக்கு சேர்த்து சாப்பிடலாம்.
- துவையலாக அரைத்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.
- முருங்கை கீரையை எண்ணெய் ஊற்றாமல் வதக்கி அதில் வேர்க்கடலை பொடியை தூவி சாப்பிட நல்ல ருசியாக இருக்கும்.