எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த இலந்தை
இலந்தை முட்டைவடிவ இலைகளும் முட்களுடன் உடைய சிறிய மரம். இதன் இலை , பழம், வேர், பட்டை என அனைத்தும் மருத்துவ பயனுடையது. இந்தியா முழுவதும் காணப்படுகிறது.
நாட்டு இலந்தை, காட்டு இலந்தை என்ற வகைகள் உண்டு. உடல் உஷ்ணத்தை தணிக்கும், அதிகமாக சாப்பிட்டால் உடலில் சூட்டை அதிகரிக்கும். இலந்தைப்பழத்தை சாப்பிட்டு வர வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்றும்.
நினைவாற்றல் அதிகரிக்க
100 கிராம் இலந்தைப்பழத்தை எடுத்து விதைகளை நீக்கி 1/2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 250 மில்லியாக காய்ச்சி குடித்து வர நியாபக சக்தி அதிகரிக்கும், மன அழுத்தம், முளை பதட்டம் குணமாகும். மேலும் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும், உடலில் உள்ள நட்சுக்களை வெளியேற்றும்.
ஆஸ்துமா குணமடைய
இவை அனைத்தையும் நன்றாக காயவைத்து இடித்து தூளாக்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 5 கிராம் அளவு தேனில் குழைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும்.
மேலும் இருமல், வறட்டு இருமல், மூக்கடைப்பு, நுரையீரல் பிரச்சினைகள் தீரும்.
வயிற்றுப்புண் குணமாக
10 இலந்தை இலைகளை எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து மோரில் கலந்து குடித்து வர வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றெரிச்சல், வயிற்றுக்கடுப்பு ஆகியவை குணமாகும்.
உடல் வலுவடைய
இலந்தை வேர் இடித்து தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி அதிகாலை நேரத்தில் குடித்து வர நரம்புகள் வலுப்பெறும். உடல் வலுவடையும்.
சிறுநீர் கடுப்பு தீர
இலந்தையின் இலையை நன்றாக அரைத்து தொப்புள் மற்றும் அதனை சுற்றி தடவினால் சிறுநீர் கடுப்பு தீரும். மேலும் வயிறு வீக்கம், வயிற்று வலி ஆகியவை தீரும்.
வெள்ளைப்படுதல், வெட்டை சூடு குறைய
துளிர் இலந்தை இலைகளை எடுத்து அதனுடன் கருவேல மர இலையின் துளிரை சமஅளவு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு அதிகாலையில் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல், வெட்டை சூடு குணமாகும்.
மாதவிடாய் கோளாறு நீங்க
20 இலந்தைப் பூக்களை ஒரு வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வர மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
பெரும்பாடு குணமாக
இலந்தைப்பட்டை 40 கிராம், மாதுளம்பட்டை 40 கிராம் இவற்றை 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 100மிலியாக காய்ச்சி தினமும் 4 வேளை குடித்து வர பெரும்பாடு குணமாகும்.
பல் பிரச்சனைகளை தீர்க்கும்
இலந்தைப்பழத்தை சாப்பிட்டு வர பல் வலி, பல் ஆட்டம், ஈறு வலி, ஈறு வீக்கம், ஈறுகளில் இரத்தம் வடிதல் ஆகியவை குணமாகும்.
தேமல் மறைய
ஒரு கைப்பிடி அளவு இலந்தை இலையை எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து தேமல் இருக்கும் இடத்தில தடவி வர தேமல் மறையும்.
பசி உண்டாக
இலந்தைப்பழத்தை விதையை நீங்கி அதனுடன் சிறிது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வடை போன்று தட்டி காயவைத்து சாப்பிட்டு வர வாந்தி, மந்தம் ஆகியவை நீங்கும். பசியின்மையால் தவிப்பவர்களுக்கு நல்ல பசியை உண்டாக்கும்.