தண்டுக்கீரை மருத்துவ பயன்கள்
தண்டுக்கீரை அனைத்து இடங்களிலும் கிடைக்க கூடிய ஒரு கீரையாகும். இதன் இலைகளையும், தண்டையும் சமைத்து உண்ணலாம். உலகமெங்கிலும் பலவகைகளில் தண்டுக்கீரை கிடைக்கிறது.
தண்டுக்கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து, தாது உப்புகள், மெக்னீசியம் என பல சத்துக்களை கொண்டது. இதனால் இதனை அனைவருமே சாப்பிடலாம். சளி, ஆஸ்துமா பிரச்சினைகள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது குளிர்ச்சி தன்மை உடையது.
உடலுக்கு சக்தியை தருகிறது
தினசரி உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு பொருட்களை வெளியேற்றுகிறது. இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது.
மாரைடப்பை தடுக்கிறது
அடிக்கடி தண்டுக்கீரையை சாப்பிட்டுவந்தால் வரடைப்பு வரும் வாய்ப்பை குறைகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தம் வராமல் கட்டுப்படுத்துகிறது.
மூல நோய்க்கு சிறந்தது
தண்டுக்கீரை குளிர்ச்சியை தருவதால், மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட்டுவந்தால் மூல நோய் பாதிப்புகள் குறையும். மேலும் உடல் உஷ்ணம் உடையவர்கள் அடிக்கடி இக்கீரையை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
இரத்த வெள்ளையணுக்கள்
இரத்தத்தில் இருக்கும் இரத்த வெள்ளையணுக்களை வள ப்படுத்துகிறது. இதனால் நோய் தொற்றுக்களை வரவிடாமல் உடலை பாதுகாக்கிறது.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் இருந்தாலே பல நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். தண்டுகீரையில் நார்ச்சத்து உள்ளதால் இது செரிமான மண்டலத்தை சரியாக இயங்க செய்து மலச்சிக்கல் இல்லாமல் இருக்க செய்யும். மூல நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட குணமாகும்.
கருப்பை கோளாறு நீங்க
தண்டுக்கீரை அடிக்கடி சாப்பிட்டுவர கருப்பையில் ஏற்படும் கோளாறுகளை வரவிடாமல் தடுக்கிறது. குடல் புண்ணை குணமாக்குகிறது. உணவு மண்டலத்தை சீராக இயங்க வைக்கிறது.