முள்ளங்கி முக்கிய 7 நன்மைகள்
முள்ளங்கி வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ள கிழங்கு வகை இனம். இதில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள் போன்ற வண்ணங்களிலும் உள்ளன. பொதுவாக வெள்ளை முள்ளங்கி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
முள்ளங்கியின் முக்கிய குணம் சிறுநீர் பெருக்கியாகவும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதாகவும், பசி தூண்டியாகவும்செயல்படுகிறது. இதன் இலை, விதை, கிழங்கு மருத்துவப்பயனுடையது.
1. உடல் எடையை சரியான முறையில் பராமரிக்க
முள்ளங்கியை சமைத்து சாப்பிட சிறுநீர் எரிச்சல், வயிற்று எரிச்சல், வாதம், கபநோய்கள் குணமாகும். உடலில் தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சரியான முறையில் இருக்க உதவும்.
2. ஜீரண சக்தி அதிகரிக்க
முள்ளங்கி சாப்பிட்டு வர ஜீரணசக்தியை அதிகரிக்கிறது. இது உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. முள்ளங்கிச்சாறுடன் சிறிது தேன் கலந்து கொடுக்க மலச்சிக்கல் தீரும்.
3. வாத நோய்கள் தீர
முள்ளங்கியின் இலைச்சாற்றை 5மிலி அளவு தினமும் 3 வேளை சாப்பிட்டு வர சிறுநீர் கடுப்பு, மலச்சிக்கல், வாத நோய்கள் தீரும்.
4. சிறுநீரக கோளாறு நீங்க
முள்ளங்கியை சாறு பிழிந்து 25மிலி அளவு காலை, மாலை இருவேளை தினமும் குடித்து வர சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.
5. நுரையீரலை பாதுகாக்கும்
முள்ளங்கி சாற்றை பிழிந்து அடிக்கடி அருந்தி வர நுரையீரலை பாதுகாக்கும். நுரையீரல் பிரச்சினையை வராமல் தடுக்கிறது.
6. சரும பாதுகாப்பு
முள்ளங்கியில் உள்ள நீர் சரும ஈரப்பதத்தை பராமரித்து தோல்களில் சுருக்கங்களைத் தடுக்கிறது. முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி, ஆண்டிஆக்சிடன்ட்கள் சரும பராமரிப்புக்கு பயன்படுகிறது.
7.முகப்பரு, கரும்புள்ளிகள் மறைய
முள்ளங்கி விதையை தயிர் சேர்த்து கலந்து மை போல் அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வர முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.