உணவே மருந்து
அகத்திக்கீரை சாம்பார் செய்முறை
தேவையான பொருட்கள்
- அகத்திக்கீரை – 1 கட்டு
- பாசி பருப்பு – 100 கிராம்
- சின்ன வெங்காயம் – 5
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 3
- பூண்டு பல் – 5
- மிளகு – சிறிதளவு
- சீரகம் – சிறிதளவு
- மிளகாய் தூள் – சிறிதளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பருப்பை நன்கு அலசி வேகவைத்து எடுத்து வைத்து கொள்ளவும். அகத்திக்கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம், பூண்டு, மிளகு ஆகியவற்றை தனியாக அரைத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சின்ன வெங்காயம், தக்காளி, பச்ச மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள பூண்டு கலவை மற்றும் மஞ்சள் தூள், வேகவைத்த பருப்பை சேர்த்து அத்துடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் அகத்திக்கீரையை சேர்த்து 15 நிமிடம் வேகவைத்து இறக்க வேண்டும்.
பயன்கள்
- கண்கள் குளிர்ச்சியாகும், பார்வை தெளிவாகும்.
- நினைவாற்றல் அதிகரிக்கும், பித்தம், பித்த மயக்கம் குணமாகும்.
- நீரடைப்பு குணமாகும் சிறுநீர் தடையில்லாமல் போகும்.
- வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறையும்.