கடுக்காய் மருத்துவ பயன்கள்
கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம் என்ற பழமொழிக்கேற்ப நம் உடலை என்றும் இளமையை வைத்துக்கொள்ள கடுக்காய் ஒரு சிறந்த மூலிகையாகும். திரிபலா சூரணத்தில் நெல்லிக்காய், தான்றிக்காயுடன் கடுக்காய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
கடுக்காய் எப்படி சாப்பிட வேண்டும்?
கடுக்காயை அப்படியே பயன்படுத்தினால் உடலுக்கு தீங்கானது அதனால் அதை சுத்தி செய்து பயன்படுத்தவும். அல்லது அரிசி களைந்த தண்ணீரில் ஊறவைத்து பிறகு வெயிலில் உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்தலாம்.
சுத்தி செய்யும் முறை
கடுக்காயை உடைத்து கொட்டையை நீக்கி விட்டு நன்றாக இடித்து தூளாக்கி பயன்படுத்தவும்.
இரத்தம் சுத்தமாக
15 கிராம் கடுக்காய்ப்பொடி, 4 கிராம் கிராம்பு பொடி சேர்த்து வெந்நீரில் கலக்கி வடிகட்டி அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து காலையில் சாப்பிட உடல் சூட்டை தணிக்கும், இரத்தத்தை சுத்திகரிக்கும், இரைப்பையை பலப்படுத்தும். இதனை 10 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு வரலாம்.
பல் பிரச்சனைகள் தீர
பற்பொடியுடன் கடுக்காய்ப்பொடியை சேர்த்து பல் துலக்கி வர பற்களில் இரத்தம் கசிதல், ஈறு வீக்கம், பல் வலி ஆகியவை தீரும்.
வாந்தி, மயக்கம் தீர
5 கிராம் கிராம் கடுக்காய்ப்பொடியை சிறிதளவு திராட்சை கலந்து அரைத்து 1 கிராம் அளவு காலையில் சாப்பிட்டு வர தலைசுற்றல், பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, வாய் கசப்பு ஆகியவை குணமாகும்.
நீண்ட நாட்கள் ஆற புண்கள் ஆற
கடுக்காய் பொடியுடன் சிறிதளவு மலைவேம்பு சாற்றை கலந்து தடவி வர ஆறாத புண்களும் ஆறும்.
ஆண்மை அதிகரிக்க
கடுக்காய், துளசி விதை, சாதிக்காய், சுக்கு இவை அனைத்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து இரவு படுக்கும் முன் ஒரு சிட்டிகை அளவு பால், கற்கண்டு கலந்து சாப்பிட்டு வர ( 48 நாட்கள் ) ஆண்களின் மலட்டுத் தன்மை நீங்கும்.
காமாலை குணமாக
ஈரல்நோய், குஷ்டம், வயிற்றுவலி, இரைப்பு, தொண்டைநோய், காமாலை போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.
மலச்சிக்கல்
கடுக்காய்ப்பொடியை இரவில் 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தண்ணிரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர மலச்சிக்கல் தீரும்.