மூலிகைகள்

முந்திரி பருப்பு பயன்கள்

முந்திரி பருப்பு அதிக சுவை கொண்ட பருப்பு வகைகளில் ஒன்றாகும், இதை பச்சையாகவும் வருத்தும் சாப்பிடலாம். உணவு வகைகளில் இதை சேர்ப்பதால் நல்ல சுவையுடன் இருக்கும்.

இதய ஆரோக்கியம்

நன்மை தரும் கொழுப்பு சத்து முந்திரியில் நிறைந்துள்ளதால் இதனை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பைடோஸேரால்ஸ், ஓலிக், பினாலிக் காம்பவுண்ட்ஸ் அமிலங்கள் இதயத்திற்கு நன்மையை தருகிறது.

உடல் எடை சீராக இருக்க

பாதம், கடலை போன்ற பருப்பு வகைகளை விட முந்திரியை கொழுப்புகள் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது, முந்திரி பருப்பில் நார்ச்சத்து உள்ளதால் அதிக பசி உணர்வை தடுக்கிறது இதனால் அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை சீராக இருக்க உதவுகிறது.

புற்று நோயை தடுக்கிறது

இனோசிடால் மற்றும் அனகார்டிக் அமிலங்கள் புற்று நோய்களுக்கு எதிராக போராடும் தன்மை உடையவை இது முந்திரியில் அதிக நிறைந்துள்ளதால் புற்று நோய் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது.

ஆண்மையை அதிகரிக்கும்

முந்திரி பருப்பு ஆண்களுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கிறது. முந்திரிப்பருப்பை நெய்விட்டு வறுத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர தாது உற்பத்தி அதிகரித்து நல்ல பலம் உண்டாகும்.

எலும்புகள் வலுப்பெறும்

காப்பர் சத்து முந்திரிப்பருப்பில் அதிகளவு உள்ளதால் கொலாஜன் உற்பத்தியை ஒழுங்குபடுத்தி மூட்டு வலிகள் ஏற்படுவதை குறைகின்றது. மேலும் எலும்புகள் நல்ல உறுதியை பெறுகிறது.

பற்கள், ஈறுகள் வலுப்பெற

முந்திரிப்பருப்பை நன்றாக மென்று சாப்பிடும்பொழுது உமிழ்நீர் சுரந்து பற்களில் பற்குழிகளை உருவாக்கும் பாக்டிரியாக்களை சமநிலைப்படுத்துகிறது. மேலும் ஈறுகளுக்கும் உறுதியை தருகிறது.

ஆரோக்கியமான தலைமுடியை பெற

முந்திரிப்பருப்பில் காப்பர் செலினியம், மக்னீசியம், ஆன்டி ஆக்சிடன்ட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் ஆரோக்கியமான தலைமுடியை பெற உதவுகிறது. மேலும் கூந்தலுக்கு மினுமினுப்பை தருகிறது.

நல்ல தூக்கம் பெற

முந்திரிப்பருப்பை பொடியாக்கி பாலில் கலந்து அதில் கற்கண்டு சேர்த்து இரவு சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கத்தை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =

error: Content is protected !!