மூலிகைகள்
எருக்கு செடியின் மருத்துவ பயன்கள்
எருக்கு பால் உள்ள செடியினம். இதன் எருக்கம் பூ, பட்டை, இலை, பால் ஆகியவை மருத்துவ பயனுடையது. பித்தம், வீக்கம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும். இலை நச்சுக்களை நீக்கும், வாந்தியை உண்டாக்கும்.
எருக்கு மருத்துவ பயன்கள்
- நீண்ட நாட்களாக ஆறாத புண்களுக்கு எருக்கு இலையை காயவைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணையுடன் கலந்து போட்டு வர புண்களை ஆறும்.
- எருக்கன் இலைச்சாறு 3 துளிகள், தேன் 10 துளிகள் சேர்த்து கலந்து கொடுக்க வயிற்றுப்புழுக்கள் வெளியாகும்.
- மலச்சிக்கல் இருந்தால் 30மிலி விளக்கெண்ணெயில் எருக்கன் இலைச்சாறு 3 துளி விட்டு சாப்பிட மலம் இளகி மலச்சிக்கல் தீரும்.
- எருக்கன் இலைச்சாறு 50மிலி எடுத்து அதில் பெருங்காயம், இலவங்கம், பூண்டு, வசம்பு ஆகிய ஒவ்வொன்றிலும் 5 கிராம் அளவு அடுத்து போட்டு காய்ச்சி இறக்கி வடிகட்டி வைத்துகொள்ளவும். காதுவலி, காதில் சீழ் வடிதல் போன்றவற்றுக்கு சில துளிகள் காதில் விட குணமாகும்.
வெள்ளெருக்கு பூ பயன்கள்
- வெள்ளெருக்கு பூ – 100 கிராம் ( உலர்ந்தது )
- மிளகு – 50 கிராம்
- இலவங்கம் – 10 கிராம்
- குங்குமப்பூ – 10 கிராம்
- கோரோசனை – 10 கிராம்
இவற்றை அனைத்தையும் ஒன்றாக அரைத்து மிளகு அளவு எடுத்து தேனில் கலந்து காலை, மாலை என 48 நாட்களுக்கு சாப்பிட ஆஸ்த்துமா, இருமல், காசம், ஜன்னி குணமடையும்.