உணவே மருந்து

வாழைத் தண்டு ஜுஸ்

இப்போது சிறுநீரகக் கல் பிரச்சினை மிக அதிகமான அளவில் உள்ளது. இப்போது பெண்களுக்கும் அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் தற்கால உணவு முறையிலுள்ள கோளாறுகள் தான்.

இது வந்தபின்பு ஓரளவு தடுக்கவும் என்றும் வராமல் தடுக்கவும் எளிய பயனுள்ள முறைகள் சிலவற்றில் முக்கியமானது வாழைத் தண்டு ஜுஸ். அதன் தயாரிப்பு முறை பின்வருமாறு….

ஒரு நபருக்கு சுமார் பத்து செ மீ நீளமுள்ள ஓரளவு கனமான வாழைத் தண்டு இருந்தால் போதுமானது.

அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நாரை எடுத்துவிட்டு மிக்ஸியில் போட்டு சிறிதளவு சீரகமும் சேர்த்து வேண்டுமளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவேண்டும்.

அரைத்ததை வடிகட்டியும் பிழிந்தும் ஜுஸாக எடுத்து அப்படியே சாப்படலாம். சீரகம் சேர்ப்பதால் மணமாகவும் இருக்கும்.

சீரகம் இல்லாமல் சாறு எடுத்து எலுமிச்சம் சாறும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து இனிப்புப் பானமாகவும் அருந்தலாம்.

இதை அடிக்கடி சேர்த்து வந்தால் சிறுநீரகக்கல் பிரச்சினை வரவே வராது.

நோய் இல்லாதவர்களும் சாப்படலாம் மிகவும் நல்லது.

நோயினால் துன்பப்படுவதைவிட அதற்கு சிகிச்சைசெய்து செலவழிப்பதைவிட இது மிகவும் எளிய இயற்கையான தடுப்பு முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + seven =

error: Content is protected !!