உணவே மருந்து

வளமான வாழ்விற்கு உணவே மருந்து

இயற்கை உணவும் ஆரோக்கியமும்

நாம் அன்றாடம் உண்ணும் அளவில் உள்ள எண்ணற்ற சத்துக்களைப் பற்றிய ஆரோக்கியத்திற்கு தேவையானவற்றைப் பார்ப்போமா!

பல்வேறு மூலிகைகள், காய்கனிகள், கீரை வகைகள், அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற் போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்கே இடமில்லை. ‘உணவே பிரமன், உணவிலிருந்தே எல்லா உயிரினங்களும் தோன்றுகின்றன. உணவாலேயே வாழ்கின்றன.

இறந்த பிறகு மற்ற உயிரினங்களுக்கும் உணவாக மாறுவதே இயற்கையின் இயல்பு’ என உபநிஷத்துக்கள் கூறுவதை

‘தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனில்’

என்று திருவள்ளுவரும், ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் ரூபமாகத் தோன்றுகிறார் என காந்தியடிகள் போன்றோர் கூறியது உணவில்லையேல் வாழ்க்கையே அழியும் என்பதைத்தான் காட்டியுள்ளது.

இன்றைய அறிவியல் முன்னேற்றம் நோய்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அதற்குரிய எதிர்ப்பு மருந்துகளைத் தருவதில் அதிக முன்னேற்றம் அடைந்து சிறப்பாக மருத்துவப் புரட்சி ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் புதுப்புது நோய்களும் தோன்றி மனித குலத்திற்கு அச்சுறுத்தலை அளித்து வருவதும் நமக்கு தெரிந்ததுதான்.

அதனை கட்டுப்படுத்த மருத்துவ ஆராய்ச்சி மூலம் புதுப்புது மருந்து வகைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு காரணம் நம் முன்னோர்கள் நோய் வராமலிருக்கும் வழிமுறைகளை சிந்தித்து நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களிலேயே நோய் வருமுன் காப்பதற்கும், வந்ததற்குப் பின் கடைபிடிக்க வேண்டிய மருத்துவ வழி வகைகளை எண்ணற்ற வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிய வைத்துள்ளனர்.

ஆனால் அதை நாம் முறையாக கடைப்பிடிக்கவும், புரிந்து கொண்டு செயல்படுத்தவும் தவறியுள்ளோம் என்பதில்தான் – நாம் நம் நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் என்பதினால்தான் – நாம் நம் நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கம் ஒவ்வாத பிற நாட்டு உணவு, நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டிருப்பததோடு, உடலை பாதிக்கும் தீய பழக்க வழக்கங்களான புகைத்தல் மது மற்றும் கஞ்சா, அபின், பிரெளன் சுகர் போன்ற போதைப் பொருட்களை பாவித்து நமது உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு அதனால் நரை, திரை, மூப்பு சாக்காடுகள் ஆகியவை குறைந்த வயதிலேயே ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கின்றோம்.

உடல் ஆரோக்கியம்

உணவு உடலைப் புஷ்டியாக்குவதை விட அதை ஆரோக்கியமாக வைத்திருப்பதே முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நமது உணவிற்கு ஏற்றபடித் தான் உடலும், நமது புத்தி, சக்திகளும் அமையும்.

நாம அனைவரும் பெரும்பாலான உணவு வகைகளை சமைத்தே சாப்பிடுகிறோம். எனினும் பலவித காய்கனி வகைகளை அப்படியே சுத்தம் செய்து பச்சையாகவே சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும். நாம் சமையல் செய்யும்போது பலவித ஊட்டச்சத்துகள் அழிந்து போகிறது. எப்படி அழிகிறது, எதனால் அழிகிறது என்பதை பார்க்கலாமா?

அரிசி

முதலாவதாக அரிசியை எடுத்துக் கொள்வோம். முன்காலம் போல் கைக்குத்தல் அரிசி கிடையாது. நாம் இயந்திரத்தில் கொடுத்து நன்றாக தீட்டி அரைத்து விடுவதால் அரிசியில் இருக்கும் தயாமின் பீ வைட்டமின் வீணாக்கப்படுகிறது.

இந்த வைட்டமின் தானியத்தின் அடிப்பகுதியில்தான் இருக்கும். இவ்வாறு தீட்டப்பட்ட அரிசியை உண்ணும்போது நமக்கு மாவுச் சத்துதான் கிடைக்கும். உயிர்ச்சத்தும் வைட்டமின்களும் காய்கறி பழங்களிலிருந்து கிடைக்கின்றது. இந்த சத்து நீரினாலும் வெப்பத்தாலும் சுலபமாக அழியக்கூடியவை. சத்துகள் அழியாமலிருக்க சரியான முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

உணவுப் பொருட்களை சமையல் செய்யும் பொழுது, பாதுகாத்து வைக்கும்பொழுது, காற்றில் வைக்கும்பொழுது, சூடாக்கும்பொழுது, கழுவும் பொழுது என பல சமயங்களில் அதன் சத்துகள் வீணாக்கப்படுகிறது. சமைக்கும் விதமும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.

குறைந்த அளவு தண்ணீரில் ஒரு தடவை கழுவி அடுத்து முறை கழுவுகின்ற தண்ணீரைச் சமையலில் வேறு பொருட்கள் தயாரிக்க உபயோகிக்கலாம். அதிகமான தண்ணீரில் வேக வைத்துக் கஞ்சியை வடித்துவிடும்போது இருக்கும் சத்தும் போய் விடுகின்றது.

அதனால் குக்கரில் சமைக்கும்போது சத்துகள் வீணாவதில்லை. எண்ணெய் வகைகளைத் திரும்பத் திரும்ப சூடு செய்வதால் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு உடலுக்கு கெடுதல் ஏற்படுகிறது. அடிக்கடி சூடு பண்ணுகிற எண்ணெய் ரத்தத்தில் கொழுப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.

அதுபோன்றே பாலை அதிக அளவு சூடுபடுத்துவதால், பாலில் இருக்கும் லாக்டோஸ் எனப்படும் சர்க்கரை மற்றும் புரதச் சத்தும் குறையும். நீரில் கரையும் வைட்டமின்கள் சமைக்கும்போது அதிக அளவில் அழிக்கபடுகின்றன.

காய்கறிகளை எப்படி சாப்பிடலாம்

பொதுவாகவே எந்தவித காய்கறிகளாக இருந்தாலும் கழுவிய பிறகு தான் நறுக்க வேண்டும். அதிலும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கும்போது காயின் அத்தனை பரப்புகளும் காற்றில் பட்டு அதில் உள்ள சத்துகளை இழக்கின்றன.

காய்கறிகளை எப்போதுமே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தான் போட வேண்டும். உருளைக் கிழங்கு போன்றவற்றை தோலுரிக்காமல் வேக வைத்ததிற்குப் பின் தான் தோல் நீக்க வேண்டும்.

இலைக் காய்கறிகளில் நிறையை கரோட்டின் போன்ற வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளன என்பதால் தண்ணீரில் வேக வைத்து சமைப்பது சிறந்த பலன்களைத் தரும்.

குளிர்சாதனப் பெட்டி பயன்பாடு

காய்கனி வகைகளை பொதுவாகவே குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் சத்துகள் பாதுகாக்கப் படுகின்றன. முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவதால் அதில் இருக்கும் அவிட்டின் என்ற புரதம் பயோடின் என்கிற உயிர்ச்சத்தை இழக்கிறது.

எனவே வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நல்ல நோக்குடன் நமது அன்றாட உணவு வகைகளை சரியான முறையில் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் ருசியும் மணமும் குணமும் நிறைந்ததாக சாப்பிடும்போது, கண்களுக்கு தெரியாத நுண்கிருமிகள் அழிந்துவிடுவதோடு, எளிதாக ஜீரணம் ஆகும் தன்மையுடன் நல்ல ஆரோக்கியம் அளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

நம்மில் சிலர் செய்வதைப் போல் அதிக நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் கிழங்குகளையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =

error: Content is protected !!