உணவே மருந்து
பொன்னாங்கண்ணி கீரை கூட்டு
தேவையான பொருள்கள்
-
- பொன்னாங்கண்ணி கீரை
- பாசிப்பருப்பு – 50 கிராம்
- சின்ன வெங்காயம் -10
- பச்சை மிளகாய் – 5
- பூண்டு பல் – 7
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- மிளகு – சிறிதளவு
- சீரகம் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய்
செய்முறை
பூண்டு, சீரகம், மிளகு தனியாக அரைத்துக்கொள்ளவும். பிறகு பாசிப்பருப்பு, பொன்னாங்கண்ணி கீரை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கீரை வெந்ததும் அரைத்து வைத்துள்ள பூண்டு, சீரகம், மிளகு கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கிவைத்து விட்டு, பிறகு ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதங்கியவுடன் கீரை கூட்டு சேர்த்து நன்றாக கலக்கி விட்டு இறக்கவும்.
பயன்கள்
- கண் நோய்களுக்கு சிறந்த மருந்து, வாரம் ஒரு முறை சாப்பிட கண் தெளிவு பெறும்.
- உடல் பொலிவு பெரும்.
- உட்சூடு, மூலம் இவற்றை குணமாக்கும் உடல் குளிர்ச்சி பெறும்.
- நோய் தணித்து உடல் தேற்றவும், பசிதூண்டவும் மருந்தாக பயன்படுகிறது.