மூலிகைகள்
திராட்சை பழம் நன்மைகள்
திராட்சை புத்துணர்ச்சியை தரும் பழம். கொடி இனத்தை சார்ந்தது. இப்பழத்தை பச்சையாகவும் அல்லது ஜூஸ் செய்து சாப்பிடலாம். இதனை தமிழகத்தில் கொடி முந்திரி என்றும் அழைப்பதுண்டு.
திராட்சையில் இருந்து வினிகர், எண்ணெய், மதுபானங்கள் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்துள்ளது. திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
திராட்சை பயன்கள்
- உடலில் உள்ள அதீத பித்தத்தை நீக்கும், உடல் வறட்சியை நீக்கி உடலுக்கு ஊட்டமளிக்கும்.
- நரம்புகள், கல்லீரல், மூளை, இதயம் போன்ற உறுப்புகளை வலுவாக்குகிறது.
- நீர்க்கடுப்பு, சிறுநீர் சொட்டு சொட்டாக பிரிதல் போன்றவை உடனே குணமாக்கும்.
- பயணத்தினால் ஏற்படும் சோர்வை குறைக்கும். உடல் சூட்டை தணிக்கும்.
- இரத்த சோகையை நீக்கும், இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
- பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை குணாக்குகிறது. அந்நேரத்தில் திராட்சைப்பழ சாறு அருந்தினால் உடல் அசதியை போக்கும்.
- உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கும். உடல் எடையை சரியான அளவில் வைத்திருக்க உதவும்.
- வயிறு சம்பந்தமான கோளாறுகளை குணமாக்குகிறது. பசி எடுக்காதவர்கள் திராட்சையை அடிக்கடி சாப்பிட்டுவர பசியின்மையை போக்கும்.
- திராட்சைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கிறது.
- திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சுருக்கங்கள் மறையும். சருமம் பொலிவு பெறும்.