பரங்கிக்காய் பயன்கள்
பரங்கிக்காய் உருண்டையான அதிக சதைப்பற்றுள்ள காயாகும். இதன் காய், மற்றும் பழம் சமைத்து சாப்பிடுவது உண்டு. ஆடியில் விதைத்து தையில் காய்க்கும் இதனால் பொங்கல் பண்டிகையின் போது பரங்கிக்காய் அனைவரின் வீட்டிலும் சமைப்பதுண்டு.
இதன் காய் சாப்பிட நல்ல ருசியாக இருந்தாலும். இதன் பட்டையும், விதைகளும் மருத்துவ பயனுடையது.
கொழுப்பை குறைக்கும், தாது புஷ்டி உண்டாக்கும்.
பரங்கி விதையை சாம்பலில் நன்றாக புரட்டி காயவைத்து மேல் தோலை நீக்கிவிட்டு சாப்பிட்டு வர உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீங்கி உடலை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது, மேலும் வெப்பத்தால் ஏற்படும் பித்த நோய்களை குறைக்கிறது.
சிறுநீர் கோளாறுகள் நீங்க
- பரங்கிவிதை – 30 கிராம்
- வெள்ளரிவிதை – 15 கிராம்
- பூனைக்காலி விதை – 15 கிராம்
இவற்றை 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி 100மிலியாக காய்ச்சி வடிக்கட்டி காலை, மாலை குடிக்க சிறுநீர் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
பித்தம் நீங்க
பரங்கி விதையை தோல்களை நீக்கி நன்றாக காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு 5 கிராம் அளவு எடுத்து அதில் 1/2 கிராம் அளவு சீரகத்தூள் சேர்த்து சிறுது வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர இரத்தவாந்தி, இரத்தபித்தம் நீங்கும்.