மூலிகைகள்
சுரைக்காய் நன்மைகள்
சுரைக்காய் உடல் சூட்டை தணித்து உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களை வராமல் தடுக்கிறது. இதனை பருப்புடன் சமைத்துண்ண நல்ல ருசியாக இருக்கும். ஜூஸ் அகவும் பருகலாம்.
இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
இதில் உள்ள நார்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகி இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
மூலநோய்களை குணமாக்குகிறது
மூலநோய் உள்ளவர்கள் அடிக்கடி சமைத்துண்ண மூலநோய் குணமாகும். குடல் புண் இருந்தாலும் குணமாகும்.
உடல் எடை குறைய
கெட்டக்கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக இருக்க உதவுகிறது. இதில் நார்சத்து உள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது.
சிறுநீர் பிரச்சினை உள்ளவர்களுக்கு
சிறுநீரை வெளியேற்றும் பொழுது ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி உள்ளவர்கள் வாரம் இருமுறை சுரைக்காயை சமைத்துண்ண குணமாகும்.
உடல் வலுப்பெற
சுரைக்காய் நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது. உடலையை வலுப்படுத்துகிறது. மேலும் கல்லீரலில் உள்ள வீக்கத்தை குறைக்கிறது.