சூரியகாந்தி மருத்துவ பயன்கள்
சூரியகாந்தி விதைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் விதையில் தோல் நீக்கி முந்திரிப்பருப்பை போன்று மென்று சாப்பிடலாம். அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் இவ்விதைகளில் இருந்து எண்ணெய் எடுத்து சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சூரியகாந்தி அசுத்த காற்றை சுத்தமாக்கும் எனவே நம் வீட்டு தோட்டங்களில் வளர்ப்பது நல்லது. இதில் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் உள்ளது.
சூரியகாந்தியில் உள்ள சத்துக்கள்
வைட்டமின் ஈ, பி, பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு, கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ், செலீனியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
நீரிழிவு நோயின் அளவை குறைக்கும்
தினமும் 10 முதல் 15 சூரியகாந்தி விதை 6 மாதங்களுக்கு சாப்பிட்டு வர இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாக கூறப்படுகிறது.
தோல் சுருக்கம் மறையும்
சிலருக்கு இளம் வயதிலேயே தோல்கள் சுருங்கி வயதானவர்கள் போன்று தோற்றமளிக்கும். இதன் விதை பருப்பை தினமும் மென்று சாப்பிட்டு வர சுருக்கும் நீங்கும்.
நோய் எதிர்ப்பு திறன்
இப்பருப்பை மென்று சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்பவர்கள் தினமும் 10 முதல் 15 பருப்புகள் வரை சாப்பிட்டு வரலாம். உடலுக்கு வலுவை தரும்.
செரிமானக்கோளாறு நீங்கும்
இதன் விதைகளின் உள்ள நொதிகள் செரிமான மண்டலத்தை ஒழுங்கு படுத்தி சுரப்பை சீராக இயங்க வைக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேதருகிறது. இதனால் குடல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
சூரியகாந்தி தைலம்
சூரியகாந்திப்பூ 100 கிராம் எடுத்து 1/2 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு பதமுற காய்ச்சி எடுத்து வடிகட்டி வைத்துக்கொண்டு உடலுக்கு தேய்த்து வர உடலில் உள்ள துர்நீரை நீக்கும். தலைவலி குறையும்.
இத்தைலத்தை உடல் பிடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வெந்நீரை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.
விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க
சூரியகாந்தி விதையில் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் இதை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வர விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு அதன் வீரியத்தையும் அதிகரிக்கும்.