உருளைக்கிழங்கு நன்மைகள்
உருளைக்கிழங்கு உலகம் முழுவதுமே விரும்பி சாப்பிடக்கூடிய கிழங்கு ஆகும். உலகமெங்கும் அதிகமா பயிரிடப்படும் உணவு வகைகளில் உருளைக்கிழங்கும் ஒன்று. சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படுகிறது.
உருளைக்கிழங்கு முக்கிய குணம் தேகத்தை புஷ்டியாக்கும், குழந்தைகளுக்கும் விரும்பி உண்ணக்கூடிய ஒன்றாகும். பலவகை உணவாக செய்து சாப்பிட்டாலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடியதாகும்.
உடல் புஷ்டிக்கு
உருளைக்கிழங்கை சமைத்து உண்ண தேகம் புஷ்டியாகும். மேக வாயுவை நீக்கும். ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும். இதில் கார்போஹைட்ரேட், புரத சத்துக்கள் உள்ளதால் உருளைக்கிழங்கை சாப்பிட குறுகிய காலத்திலேயே உடல் எடையை அதிகரிக்கிறது. உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
வீக்கம், கொப்புளங்கள் குணமாக
உடலில் சூடு நீர் பட்டுவிட்டால் உருளைக்கிழங்கை அரைத்து பூச கொப்பளிக்காமல் இருக்கும். அடிபட்ட காயங்களுக்கு உருளைக்கிழங்கை அரைத்து காயங்களுக்கு மேல் வைத்து கட்ட குணமாகும்.
இதயம் காக்கும்
உருளையில் பொட்டாசியம் சத்து உள்ளதால் உடலில் உள்ள நரம்புகளில் இறுக்க தன்மையை ஏற்படாதவாறு தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு ரத்த அழுத்தத்தை சீரான அளவில் கொண்டு செல்ல உதவுவதால் இதயம் ஆரோக்கியமாக இயங்க வைக்கிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
மூளை சிறப்பாக செயல்பட
உருளைக்கிழங்கு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் சத்துக்கள் இரத்திற்கு கிடைக்கிறது இதனால் மனசோர்வு மற்றும் உடல் சோர்வை நீக்கி மூளையின் செயல்பாட்டை சிறப்பாக செயல் பட வைக்கிறது.
இரைப்பை நோயை தடுக்கிறது
உருளைக்கிழங்கில் மாவுச்சத்து உள்ளதால் இரைப்பையில் உள்ள குழாய்களில் நச்சு நீர் சேர்வதை தடுக்கிறது இதனால் இரைப்பையை பாதுகாத்து உடலுக்கு நன்மையை தருகிறது.
முகம் பொலிவு பெற
உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து அதில் தேன் கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர முகம் பொலிவு பெறும் .
தோல் சுருக்கங்கள் மறைய (potato benefits for skin in tamil)
உருளைக்கிழங்கு நசுக்கி சாறு எடுத்து இரவு தூங்குவதற்கு முன் தேய்த்து வர தோல் சுருக்கங்களை நீங்கி நல்ல பளபளப்பை தருகிறது. இது போன்று செய்து வர முதுமையை தள்ளி போடலாம்.