மூலிகைகள்

குங்குமப்பூ பயன்கள்

குங்குமப்பூ (saffron )அதன் மலரில் இருக்கும் மகரந்தம் தான் குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. உலகிலேயே அதிக விலை உயர்ந்த வாசனை பொருட்களில் ஒன்றாக இருக்கிறது.

ஒரு கிலோ குங்குமப்பூவை தயாரிக்க சுமார் ஒன்றரை லட்சம் பூக்கள் தேவைப்படுகிறது. இந்தியாவில் காஷ்மீர் பகுதிகளில் விளைகிறது. உலகிலேயே ஈரான் முதலிடத்தில் உள்ளது.

குங்குமப்பூவில் உள்ள சத்துக்கள்

குங்குமப்பூவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரோட்டின் அதிகளவு நன்மை தரக்கூடியது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு எலும்புகளை பலமாக்குகிறது. செக்ஸ் ஹார்மோனை தூண்டி ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கும் அதிக நன்மைகளை தரக்கூடியது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு, ஹைப்பர்லிபிடெமிக் போன்றவை குங்குமப்பூவில் உள்ளதால் குடல் மற்றும் இரைப்பை கோளாறுகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கரோட்டினாய்டுகள் அதிகளவு நிறைந்துள்ளதால் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினசரி 100மி.கி அளவு குங்குமப்பூவை சாப்பிடுவதால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமப்பூ

கர்ப்பிணி பெண்கள் சிலபேருக்கு இரும்பு சத்து குறைபாடு ஏற்படும். குங்குமப்பூவில் இரும்புச்சத்து அதிகளவு இருப்பதால் இதை சாப்பிட செல்கிறார்கள். இது தான் உண்மையான காரணம் குங்குமப்பூவை சாப்பிட்டால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்பதெல்லாம் வெறும் கதை தான்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வு, வாந்தி, தலைச்சுற்றல், குமட்டல் ஏற்படும் பொது பாலில் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம்.

முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது

குங்குமப்பூவில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

சரும பொலிவுக்கு

குங்குமப்பூவுடன் சிறிது சந்தனம் மற்றும் 2 ஸ்பூன் பாலை கலந்து நன்றாக கலக்கி முகத்தில் பூசி மஜாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர முகம் பளபளப்பாக மாறும். வாரத்திற்கு ஒரு முறை செய்து வரலாம்.

தலைவலி தீர

குங்குமப்பூவுடன் விளாம்பிசின், பனை வெல்லம் மூன்றையும் ஒன்றாக அரைத்து இரண்டு பக்க கண்ணகளிலும் ஒட்டி வைக்க எந்தவித தலைவலியும் நீங்கும்.

குங்குமப்பூ
குங்குமப்பூ செடி

குங்குமப்பூ சாப்பிடுவது நல்லதா

இந்தியாவில் சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

உடல் நச்சுக்களை நீக்குகிறது, மனச்சோர்வை நீக்கி உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. இதில் கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்துக்கு குங்குமப்பூவை சாப்பிடுவது நல்லது.

குங்குமப்பூ ஆண்கள் சாப்பிடலாமா

குங்குமப்பூவில் உள்ள குரோசின் பாலியல் உணர்வை தூண்டி விறைப்பு தன்மையை அதிகரிக்கிறது. விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்துகிறது.

குங்குமப்பூ சாப்பிடும் முறை

தினமும் ஒருவர் 5 கிராம் அளவு உட்கொள்ளலாம். இதை பாலில் கலந்து சாப்பிடலாம். அதற்கு மேல் எடுத்துக்கொள்வதால் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பயன்படுத்தவும்.

குங்குமப்பூவை தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

வெந்நீரில் குங்குமப்பூவை போட்டால் அது தங்க நிறமாக மாறும். வாசனையும் வந்துகொண்டே இருக்கும் வண்ணமும் மாறிக்கொண்டே இருக்கும். தரம் இல்லாத குங்குமப்பூ சிவப்பு நிறத்தில் மாறும் மேலும் சிறுது நேரத்திலேயே வண்ணம் மாறுவது நின்று விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 2 =

error: Content is protected !!