கோவைக்காய் பயன்கள்
கோவைக்காய் முட்டை வடிவ காய்களையும், இதன் பழங்கள் செந்நிறத்திலும், மலர்கள் வெண்மையாகவும் கொண்ட கொடியினம். இதன் இலை, காய், கிழங்கு ஆகியவை மருத்துவ பயனுடையது.
கோவைக்காய் வேலிகளிலும் புதர்களிலும் தானே வளரக்கூடியது. கோவைக்காயை பொரியலுக்கும், வற்றலுக்கும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். கபம் சார்ந்த நோய்களையும், அஜீரணக் கோளாறுகளையும் குணமாக்குகிறது.
வாய்ப்புண் ஆற
கோவைக்காயை பச்சையாகவே மென்று சாப்பிட வாயில் உள்ள புண் ஆறும். மேலும் சரும நோய்களும் தீரும். அல்லது கோவைக்காயை இடித்து மோரில் கலந்து சாப்பிடலாம்.
உடல் சூடு குறைய
கோவைக்காயை பொரியலாகவோ, குழம்பாகவோ சமைத்து உண்ண உடல் சூடு தணியும். இதில் புளி சேர்ப்பதை தவிர்க்கவும்.
கோவை இலை பயன்கள்
- கோவை இலைச்சாறு 100மிலி நல்லெண்ணெய் 100மிலி இரண்டையும் கலந்து நன்றாக காய்ச்சி வாரம் ஒரு முறை உடலில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வர சருமநோய்கள் அனைத்தும் குணமாகும்.
- கோவை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து 100மிலி நீரில் போட்டு காய்ச்சி நன்றாக கொதித்தபின் இறக்கி வடிகட்டி காலை, மாலை குடித்து வர உடல் சூடு தணியும், மேலும் நீரடையப்பு கண் எரிச்சல் குணமாகும்.
ஆண்மை குறைவுக்கு
கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தினமும் தேனில் கலந்து தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர இழந்த ஆண்மையை பெறலாம். விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும்.
கோவைக்காய் வற்றல்
கோவைக்காயை வற்றல் செய்து சாப்பிட்டு வர உணவு செரியாமை, சுவையின்மை, பசியின்மை ஆகியவை தீரும்.
கோவை கிழங்கு மருத்துவ பயன்கள்
கோவைக்கிழங்கு சாறு 10மிலி அளவு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர ஆஸ்துமா, இரைப்பு, மார்புச்சளி ஆகியவை குணமாகும்.
உடல் சோர்வு நீங்க
கோவைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் இரும்புச்சத்து குறைபாடு நீங்கும், இதனால் சத்துக்குறைபாட்டால் ஏற்படும் உடல் சோர்வு நீங்கும்.
சர்க்கரை நோய்
கோவைக்காயை சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.