உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு
நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். கோடைகாலத்தில் நம் உடலில் நீரின் அளவு குறைவதால் உடல் மிகவும் சோர்வடையும் இதனால் நுங்கில் அதிகளவு நீர்ச்சத்து உள்ள நுங்கை சாப்பிட்டால் நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.
நுங்கில் உள்ள சத்துக்கள்
இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும் கனிமச்சத்தையும் சீராக வைக்க உதவுகிறது.
சின்னம்மை
அதிக வெப்பத்தினால் சின்னம்மை போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் கோடைகாலங்களில் நுங்கை கண்டிப்பாக சாப்பிடவேண்டும். இதனால் உடலின் வெப்பம் குறைந்து உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
உடல் சோர்வு
சிலருக்கு கோடைகாலங்களில் நீர்ச்சத்து குறைந்து அடிக்கடி மயக்கம் ஏற்படும். உடல் சோர்வுடன் காணப்படும். இவர்கள் நுங்கை தினமும் எடுத்துக்கொண்டால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து உடல் சோர்வு, மயக்கம் ஏற்படுவது குறையும்.
செரிமான கோளாறு நீங்க
நுங்கு உடலின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவும். மேலும் செரிமான பிரச்சினைகளை நீக்குவதுடன் வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்வற்றை நீக்குகிறது.
கோடைகாலங்களில் நமக்கு வரப்பிரசாதம் நுங்கு, இது வறட்சியையான இடங்களிலும் வளரக்கூடியது. தமிழகத்தில் பனைமரத்தின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.