மூலிகைகள்

நாவல் பழத்தின் மருத்துவ குணம்

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகம் நன்கு செயல்பட

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

கர்ப்பப்பை பிரச்சினைகளை நீக்கும்

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்.எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

வயிற்றுப்புண் குணமாக

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்மை

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடலுக்கு

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

ஞாபக சக்தி

ஞாபக சக்தியை அதிகரிக்கும்.சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும்.

செரியாமை நீங்க

நாவல் மரத்தின் இலையை கொழுந்து எடுத்து சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி அதில் இரண்டு ஏலக்காய் இடித்து அதில் போட்டு இலவங்கம் தூள் சேர்த்து தினமும் 2 வேளை கொடுக்க செரியாமை, வயிற்றுப்பொருமல், பேதி, உடல் சூடு குணமாகும்.

மாரடைப்பை தடுக்கும்

நாவல் பழத்தை சாப்பிட்டு வர, தாமினிகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறைந்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

சர்க்கரை நோய் கட்டுப்பட

நாவல் பழத்தின் விதைகளை காயவைத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து தினமும் காலை வேளையில் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இந்நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 4 =

error: Content is protected !!