மாதுளை இதன் ஆங்கிலப் பெயர் Punica Granatum என்பதாகும். நீண்ட சிறிய இலைகளையும் சிவப்பு நிறப் பூக்களையும் கொண்ட செடி வகை. தமிழகத்தில் வீடுகளிலும், பழத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றன. இனிப்பு,துவர்ப்பு,புளிப்பு ஆகிய மூன்று ரகங்கள் உண்டு. இலை, பூ, பிஞ்சு, பழம், ஓடு, வேர், பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள் நிறைந்தது.
பேதி குணமாக
- மாதுளம் பூ – மாதுளம் பிஞ்சு – மாதுளம் துளிர் ஆகியவைகளை சம அளவு எடுத்து அரைத்து தயிரில் சாப்பிட ரத்த பேதி – சீத பேதி நிற்கும். மாதுளம்பூவை தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி குணமாகும்.
- புளிப்பு சுவையுடைய மாதுளம் பிஞ்சை உலர்த்தி அதன் மேல் தோலை இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு சிறிதளவு பவுடரை தயிரில் கலக்கி கொடுக்க ரத்த பேதி – சீத பேதி குணமாகும்.
- பிஞ்சுக் காயை அரைத்து எலுமிச்சம் காய் அளவு தயிரில் கலந்து சாப்பிட்டாலும் ரத்த பேதி, சீத பேதி குணமாகும்.
உடல் சூடு குறைய, மூலம் குணமாக
பூச்சாறுடன் கற்கண்டு சம அளவு கலந்து சாப்பிட மயக்கம் – வாந்தி – மூலக்கடுப்பு – ரத்த மூலம் – உடல் சூடு ஆகியவை குணமாகும்.
மூக்கில் ரத்தம் வடிதல்
மாதுளம் பூ சாறு – அருகம்புல் சாறு சம அளவு சாப்பிட மூக்கில் ரத்தம் வடிதல் குணமாகும்.
புழுவெட்டு நீங்கி முடி முளைக்க
பூவைப் பிழிந்து சாறு எடுத்து புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்தால் புழுவெட்டு மாறும் – அரிப்பு தீரும் – முடி நன்றாக முளைக்கும்.
இதயம் பலம் பெற
இனிப்பு மாதுளை சாப்பிட்டால் மூளைக்கும் – இதயத்திற்கும் சத்தியை கொடுக்கும். பித்தத்தை போக்கும். இருமலை குணமாக்கும். புளிப்பு மாதுளை சாப்பிட்டால் வயிற்று கடுப்பு தீரும். தடைபட்ட சிறு நீரை வெளியேற்றும்.
குடல் புண்கள் குணமாக
எந்த வகையான குடல் புண்களையும் ஆற்றும் வல்லமை மாதுளைக்கு உண்டு. ரத்த விருத்தி ஏற்படும் விக்கல் உடனே நிற்கும். தாகம் தணியும்.
உடல் எடை அதிகரிக்க
நோய் பாதிக்கப்பட்டு உடல் பலகீனம் அடைந்தவர்கள் தொடர்ந்து மாதுளம் பழம் சாப்பிட்டு வர உடலை தேற்றும். உடல் எடையை கூட்டும். மார்பு – நுரையீரல் – தொண்டை ஆகியவற்றிற்கு வலிமையை உண்டாக்கும்.
ஆண்மையை அதிகரிக்கும்
மாதுளம் விதைகளை பசும்பால் விட்டு அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர விந்து நஷ்டம் – மேககக்கடுப்பு குணமாகும்.ஆண் தன்மையை ஏற்படுத்தும்.
ரத்த குறைபாடு நீங்க
மாதுளம் பழச் சாற்றில் தேன் கலந்து சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட ஒரு மாதத்தில் உடல் தெம்பு உண்டாகும். புதிய ரத்தம் உருவாகும்.
பெண்களுக்கு ஏற்படும் உதிரசிக்கலுக்கு
மாதுளம் பூ சாறு, அருகம்புல் சாறு சேர்த்து தினசரி இரு வேளை சாப்பிட பெண்களுக்கு உண்டாகும் உதிரப் போக்கை நிறுத்தும்.
காய்ச்சல் குணமாக
பழத்தோல் சூரணம் செய்து – சுக்கு – மிளகு – சீரகம் சம அளவு எடுத்து தூள் செய்து நெய்யில் சாப்பிட காய்ச்சல் தீரும்.
குழந்தை பாக்கியம் பெற
மாதுளம் மரப்பட்டை – வேர்ப்பட்ட்டை – விதை சம அளவு பொடி செய்து 5 கிராம் அளவு வெந்நீரில் காலை – மாலை சாப்பிட கர்ப்பப்பை கோளாறு நீந்கி புத்திர பாக்கியம் உண்டாகும்.