அன்றாட உணவில் ஏலக்காய், சில பயனுள்ள மருத்துவ பயன்கள்!!

பெரும்பாலும் நாம் ஏலக்காய்யை மனமாக இருக்க பிரியாணி சமைக்கும் போதும், பண்டிகை காலங்களில் இனிப்புகள் சமைக்கும் போதும் தான் உணவில் சேர்ப்போம். ஆனால், ஏலக்காயில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. முக்கியமாக மழைக் காலத்தில் ஏற்படும் சளி, தொண்டை தொற்று போன்றவைக்கும் இது நல்ல பயனளிக்கிறது. மேலும், ஏலக்காய் நெஞ்சு வலி, ஆண்மை மற்றும் பெண்மை குறைவுக்கும் அருமருந்து என சில ஆயுர்வேத குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. இனி, அன்றாட உணவில் ஏலக்காய், சில பயனுள்ள மருத்துவ பயன்கள் பற்றி காணலாம்…
செரிமானம்
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
நெஞ்சு சளி
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் போன்றவற்றுக்கு ஏலக்காய் ஓர் சிறந்த மருந்தாகும்
மன அழுத்தப் பிரச்சினை
மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு
நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும்
சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும்,
அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன
அழுத்தம் சட்டென்று குறைகிறது.
வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, செய்தி.காம் அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்
பிற பயன்கள்
- ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.
- வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய் சிறந்த மருந்து
- ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்
- செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்
- வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படும்