உணவே மருந்து

மூட்டு வலி, முடக்கு வாதத்தை குணப்படுத்தும் முடக்கத்தான் ரசம் செய்முறை

தேவையான பொருள்கள்

  • முடக்கத்தான் – 50 கிராம்
  • தக்காளி – 1
  • வெங்காயம் – 1
  • மிளகாய் – 3
  • பூண்டு – 1
  • புளி – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • மிளகு – சிறிதளவு
  • சீரகம் – சிறிதளவு
  • சோம்பு – சிறிதளவு
  • உப்பு – சிறிதளவு
  • நல்லெண்ணெய் – 50 மில்லி கிராம்
  • கறிவேப்பிலை

செய்முறை

முடக்கத்தான் கொடியை (அதிக மருத்துவ பயனுடையது ) மட்டும் எடுத்து அதை அரைத்துக்கொள்ளவும். பிறகு மிளகு , சீரகம், சோம்பு, பூண்டு இவற்றை ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். பிறகு நல்லெண்ணைய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் , மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள முடக்கத்தான், மிளகு , சீரகம், சோம்பு, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும், புளி கரைசல் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

பயன்கள்

  • மூட்டு வலி, பக்கவாதம் உள்ளவர்களுக்கு மிக சிறந்த உணவு. வாரம் ஒரு முறை இதை உணவாகவும் மருந்தாகவும் பயன் படுத்த வேண்டும்.
  • பித்தம், தலை சுற்றல் , உடல் வலிக்கு சிறந்த உணவு.
  • மூலம், நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =

error: Content is protected !!