என்றும் இளமையாக இருக்க ஓரிதழ் தாமரை
![ஓரிதழ் தாமரை](https://tamil.herbalsinfo.com/wp-content/uploads/2017/01/என்றும்-இளமையாக-இருக்க-ஓரிதழ்-தாமரை.jpg)
ஓரிதழ் தாமரை இதன் ஆங்கிலப் பெயர் vilola Suffruticosa.
இது சிறு செடி இனத்தைச் சேர்ந்தது. நீர்வளம் நிறம்பிய இடங்களிலும் – கொல்லைக் காடுகளிலும் தானே முளைத்து வளர்ந்திருக்கும். பூவில் ஒரு இதழ் மட்டும் இருக்கும். பூ செந்தாமரை நிறத்தில் இருக்கும் ‘ ரத்ன புருஷ் ‘ என்ற பெயரும் இதற்கு உண்டு.
இலை இனிப்புச் சுவை உடையது. காய் மிளகு போல் பசுமையாக இருக்கும். தாது வெப்பு அகற்றியாகவும் – காமம் பெருக்கியாகவும் செயல் படுகிறது.
என்றும் இளைமையாக இருக்க
ஆண்மை இழப்பால் உடல் இளைத்தவர்கள் தினசரி ஒரு கைப்பிடி அளவு இலையை தண்ணீரில் கழுவி விட்டு மென்று தின்று வந்தால் உடல் தேறி இளமையாக இருக்க இம் மூலிகை உதவுகிறது.
உடல் சூடு குறைய
தினந் தோறும் விடிவதற்கு முன் சிறிதளவு இலையை மென்று தின்ரு பால் அருந்தி 1 மண்டலம் சாபிட்டு வந்தால் வெள்ளை வெட்டை – வெட்டைச் சூடு அதி மூத்திரம் – சிற்றின்பப் பல வீனம் – நீர் எரிச்சல் குணமாகும்.
பேதி குணமாக
இலையை அரைத்து மோரில் கலக்கி குடித்து வந்தால் கிராணி – பேதி குணமாகும்.
தாது விருத்தி
இதன் சமூலத்தை உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டும் சாப்பிட்டு வரலாம். இச் சூரணம் தாது விருத்தி லேகியங்களில் சேர்க்கப் படுகிறது.
உடல் பலம் பெற
ஓரிதழ் தாமரை உடல் மெலிந்தவர்களின் உடம்பை பெருக்க வைக்கிறது.
இரும்புச்சத்து
மேக ரோகத்தையும் – சீதத்தையும் நீக்கும் தாதுவை விருத்தி செய்யும். இதில் செம்புச்சத்தும் – இரும்புச் சத்தும் மிகுதியாக உள்ளது.
வெள்ளைபடுதல் குணமாக
ஒரிதழ் தாமரை இலை – கீழா நெல்லி இலை – யானை நெருஞ்சில் இலை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து எருமைத் தயிரில் 10 – 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீர்த் தாரையில் உள்ள புண்கள் – வெள்ளைபடுதல் – ஆகியவை குணமாகும்.
காரமும் – சூடும் இல்லாத உணவு சாப்பிட வேண்டும்.
குழந்தைகளுக்கு மிகவும் நல்லது
உடல் ஆற்றல் பெறும். வனப்பான உடல் அமையும். பெண்களும் சாப்பிடலாம். தங்கச் சத்து உள்ளது. கருவுற்ற பெண்கள் பாலில் சாப்பிட்டு வந்தால் குழந்தை அழகாக – பொன்னிறமாக பிறக்கும். குழந்தைகளுக்கு கரப்பான் நோய்கள் வராது.