புளி பயன்கள்
புளி நாம் தினமும் சமையலில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். சமையலில் அதிகமாக பயன்படுத்தினாலும் இதில் அதிகளவு மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது.
அறுசுவையில் புளிப்பும் ஒன்றாகும். புளி கலந்த சாதம் கெடாமலும் இருப்பதால் புளி சாதத்தை கோவில்களுக்கு செல்லும்போது இதை செய்துகொண்டு போவது நம் முன்னோர்களின் பழக்கத்தில் ஒன்றாகும்.
கோவில்களில் பிரசாதமாகவும் புளி சாதம் கொடுக்கப்படுகிறது. புளியமரத்தின் இலை, பூ, கனி, விதை, பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவ பயனுடையது.
கருப்பை இறக்கம் குணமாக
புளி மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி இரண்டிலும் சம அளவாக எடுத்து அரைத்து இரண்டு நெல்லிக்காய் அளவு தினமும் இருவேளை சாப்பிட்டு வர கருப்பை இறக்கம் குணமாகும்.
மூட்டு வலி, சுளுக்கு குணமாக
மூட்டு வலி, கை கால் வீக்கம், சுளுக்கு இவற்றுக்கு விளக்கெண்ணையை தடவி அதில் புளிய இலையை ஒட்டி இரண்டு மணிநேரம் கழித்து சுடுநீரில் நன்றாக உருவி விட இவை அனைத்தும் நீங்கும்.
வாந்தி, வாயு, வயிற்று பொருமல் நீங்க
புளியகொட்டையின் தோல் மற்றும் மாதுளம் பழத்தோல் சம அளவு எடுத்து காயவைத்து நன்றாக இடித்து பொடியாக்கி 2 கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட உடல் சூட்டினால் ஏற்படும் பேதி, வாந்தி, வாயு, வயிற்றுப்பொருமல் நீங்கும்.
பல் பிரச்சினைகள் தீர
புளியங்கொட்டை தோல், கருவேலம் பட்டை தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் கூச்சம், பற்களில் சீழ் வைப்பது, ஈறு வீக்கம், ஈறுகளில் இரத்தம் வருவது போன்ற பல் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
வயிற்று வலி, வயிற்று புண் தீர
புளியம்பட்டை தூள், கல் உப்பு சம அளவு எடுத்து நன்றாக வெண்ணிறமாகவரும் வரை வறுத்து பொடியாக்கி சீராக குடிநீரில் சிறிது கலந்து குடித்து வர வயிற்று வலி, வயிற்று புண் ஆகியவை தீரும்.
கல்லீரல் தொற்று
கல்லீரல் ஏற்படும் தொற்றுக்களை அழிக்கும் தன்மை புளிக்கு உள்ளது.
கண்வலி நீங்க
புளியமரத்தின் பூவை அரைத்து கண்களை சுற்றி பற்றுப்போட கண்வலி மற்றும் அதனால் ஏற்படும் சிவந்த கண் மாறும்.