மூலிகைகள்

செம்பருத்தி மருத்துவ பயன்கள்

செம்பருத்தி பழங்காலம் முதலாக தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களில் ஒன்று. இதன் செடியின் இலை, பூ என்று அனைத்துமே தலையில் உள்ள பிரச்சனைகளைப் போக்கும் குணம் கொண்டது.

செம்பருத்தி சிவப்பு நிறமான பெரிய மலர்களுடன் காணப்படும். தமிழகமெங்கும் வீட்டுத் தோட்டங்களில் பெரும்பாலும் அழகுச் செடியாகவும், இதனுடைய அலங்காரமான மலர்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றது

செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்

அதிக மருத்துவ குணத்தால் ஆயுர்வேதத்தில் இது முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. உடலை பொலிவாக்கும், இதயதம் மற்றும் கூந்தலுக்கு மிகச்சிறந்த மூலிகையாகும். சித்தர்கள் இதை தங்க பஸ்பம் என்று கூறுவார்கள்.

தலைமுடி அடர்த்தியாக

பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் காலையில் தலையில் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.

இதயம் பலம் பெற

இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக் செம்பருத்தி.  பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.

பேன்கள் குறைய

செம்பருத்திப்பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும்.

சிறுநீர் எரிச்சல் நீங்க

10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

இரத்த சோகை

செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரண்டு செம்பருத்தி பூக்களை ஒரு கப் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்து வரவும்.

வயிற்று புண்

4 அல்லது 5 செம்பருத்தி இதழ்களை மென்று சாப்பிட்டு வர அஜீரணகோளாறால் ஏற்படும் வயிற்று புண்களை குணமாக்கும்

கர்ப்பப்பை கோளாறு நீங்க

செம்பருத்திப்பூவை நெய்யில் வதக்கி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மேலும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

உடல் வெப்பம் தனியா

செம்பருத்திப்பூவின் இதழ்களை மென்று சாப்பிட உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

செம்பருத்தி பூ டீ பயன்கள்

செம்பருத்தி டீயை காலை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலுக்கு எண்ணற்ற பயன்களை தருகிறது.

  • இதயம் சுருங்கி விரிய தேவையான வலிமையை தருகிறது.
  • இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
  • உடல் பருமனை குறைத்து உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
  • செம்பருத்திப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் காய்ச்சலால் ஏற்படும் சோர்வை நீக்கும். காய்ச்சலால் உண்டாகும் கிருமிகளை அளித்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eighteen =

error: Content is protected !!