மூலிகைகள்

கபம் (சளி ) கரைக்கும் ஆடா தொடை

இதன் ஆங்கிலப் பெயர் ‘ Adhatoda vasica Leaves ‘ என்று பெயர். வாசகா என்றும் – ஆட்டுசன் என்றும் – வாசை என்றும் அழைக்கப் படிகிறது. ஈட்டி வடிவமாக நீண்ட இலைகளையும் – வெள்ளை நிற பூக்களையும் கொண்ட குறுஞ் செடி இது.

கிராமப்புரங்களில் வேலிகள் வைத்து வளர்க்கப்படுகிறது. பூங்காக்களிலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.

சிலர் பித்த – கிலேத்தம நோய்க் காரணமாக உட்கார்ந்து இருக்கும் போது தொடைகளை ஆட்டிக் கொன்டிருப்பார்கள்.அப்படிப்பட்ட நோயை குணமாக்குவதில் இது முன்னணில் இருப்பதால் ‘ ஆடா தொடை ‘ என்று பெயர் வந்தது என்றும் சொல்லப் படுகிறது.

இரத்த பேதி – சீதபேதி குணமாக

ஆடா தொடை இலை – பூ – வேர் ஆகியவை மருத்துவ பயன் உடையது. இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவு எருமைம் பாலில் காலை – மாலை கொடுத்துவந்தால் இரத்த பேதி – சீதபேதி குணமாகும்.

மூச்சுத் திணறல் தீர

உலர்ந்த ஆடா தொடை இலைத்தூளை ஊமத்தை இலையில் சுருட்டி ( சுருட்டு பிடிப்பது போல் ) லேசாக புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே குணமாகும்.

சளி, இருமல், சுவாச காசம் குணமாக

ஆடாதொடை வேர் – கண்டாங்கத்திரி வேர் சமஅளவு சேர்த்து இடித்து சலித்து வைத்து கொண்டு தேனில் சிறிதளவு குழைத்து சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு – சளிசுரம் – எலும்புருக்கி ( TB ) சன்னி – இருமல் – ஈளை – குடைச்சல் – சுவாசகாசம் குணமாகும்.

நுரையீரல் பிரச்சனை தீர

இலைச்சாறுடன் சமஅளவு தேனும் – சர்ககரையும் சேர்த்து தினம் 4 வேளை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் இரத்த வாந்தி – சளி மிகுந்த மூச்சுத் திணறல் – இருமல் குணமாகும். குழந்தைகளுக்கு 5 துளிகளும் – சிறுவர்களுக்கு 10 துளிகளும் பெரியவர்களுக்கு 15 துளிகளும் கொடுத்து வரவேண்டும்.

குரல் வளம் பெற

இலைச்சாறு சளி இருமல் நீக்குவதோடு – வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் – இசிவு நீக்கியாகவும் செயல்படுகிறது.இலையை காயவைத்து இடித்து பொடி செய்து பணங்கற்கண்டு வர குரல் வளம் இனிமையாகும்.

கபம் தீர

சிறிதளவு திப்பிலி சூரண்துடன் தேனும் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தியாகும். கபம் கரையும். கஷ்ட சுவாசம் குணமாகும்.

வாயு, வாதம் குணமாக

இதன் இலைச் சாறுடன் 10 – 15 துளிகளுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து காலை – மாலை சில நாட்கள் குடித்து வந்தால் காமாலை – விக்கல் – வாந்தி – அண்டவாயு – வாத தோஷம் ஆகியவை குணமாகும்.

சுகப்பிரசவம்

கர்ப்பிணிகள் பெண்களுக்கு கடைசி மாதத்தில் இதன் வேரைக் கஷாயமாக செய்து காலை – மாலை கொடுத்து வரச் சுகப்பிரசவம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 5 =

error: Content is protected !!