மூலிகைகள்

கணையத்தைக் காக்கும் நெல்லி

இதன் ஆங்கிலப் பெயர் ‘ Phyllanthus emblica என்பதாகும்.மிகச் சிறிய இலைகளையும் – இளம்மஞ்சள் நிறக்காய்களையும் உடைய மரம். காய் இனிப்பு – துவப்பு – புளிப்பு சுவைகளை பெற்றுள்ளது. வீடுகளிலும் – தோட்டங்களிலும் தமிழகம் எங்கும் வளர்கின்றன.

கரு நெல்லி – அரு நெல்லி என இருவகைகள் உண்டு. ஆமலகம் என்றும். அழைக்கப்படுகிறது. மன்னன் அதியமான் தனக்கு கிடைத்த நெல்லிக்கனியை அவ்வை பிராட்டிக்கு வழங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது.

தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முனைத்ததுதான் நெல்லி மரம் – இது தெய்வீக தன்மை கொண்ட மரமாகக் கருதப்படுகிறது.

நெல்லிக்காயை உலர்த்தி – கொட்டை எடுத்தபின் கருப்பாக இருக்கும் இதற்கு நெல்லி முள்ளி என்றும் – நெல்லி வற்றல் என்றும் அழைக்கப்படுகிறது.

நெல்லிக்காய் சாறு – தேன் – எலுமிச்சம்பழச் சாறு சம அளவு கலந்து காலையில் மட்டும் வெறூம் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்.

நெல்லிக்காயை மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் அந்தத் தண்ணீர் எப்பேர்பட்டதாக இருந்தாலும் இனிப்பாக இருக்கும். இது தலைச் சுற்றலையும் – வாந்தியையும் நீக்கும்.

நெல்லிக்காயை தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து முடி உதிராமல் தடுக்கும் – இளநரையை மாற்றும் – முடி நன்கு வளரும்.

ஊறுகாய் போடவும் – நெல்லி மொரப்பா செய்வதற்கும் நெல்லிக்காய் பயன் படுகிறது.

நெல்லி வற்றலும் பச்சைப் பயனும் வசைக்கு 20 கிராம் எடுத்து லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி காலை – மாலை இருவேளை சாப்பிட்டுவர தலைச் சுற்றல் – கிறு கிறுப்பு – இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இதன் இலையை நீரில் இட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.

வேர்ப்பட்டையைத் தேனில் உரைத்துத் தடவ நாக்கில் உண்டான புண் ஆறும்.

காயை நன்றாக நெகிழ அரைத்து வடைபோல் தட்டி உலர்த்தி வைத்துக் கொண்டு – பச்சை மிளகாய் – மல்லிக்கீரை – இஞ்சி – உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாப்பாட்டிற்கு பயன் படுத்தலாம். உடல் சூடு தனியும்.

தினம் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். இளமையாக இருக்கவும் செய்யும்.தொற்று நோய் பரவாது. சிறு நீரகம் – இதயப் பலப்படும்.

நெல்லிக்காய் சாறுடன் – பாகற்காய் சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரை நோயை குணமாக்குகிறது.

சிறிது வெல்லத்துடன் நெல்லிக்காயை சேர்த்து சாப்பிட்டால் முடக்கு வாதம் குணமாகும். அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும் நெல்லிக் காய் பயன்படுகிறது. நெல்லிக்காயை துவையலாக செய்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

நெல்லிக்காய் சாற்றில் வைட்டமி ‘ சி ‘ அதிகம் இருப்பதால் தொற்று நோய் – தோல் நோய் குணமாகும். உடலில் உள்ள கொழுப்பு பொருளை கரைத்து ரத்தம் சீராகப்பாய்ந்து இதயத்துக்கு பலத்தைக் கொடுத்து மாரடைப்பு நோயை குணமாக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + one =

error: Content is protected !!